tamilnie 1 scaled
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு ஜனாதிபதியின் செய்தி

Share

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு ஜனாதிபதியின் செய்தி

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நிவாரணத்திட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக்காக 283 பில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்சமயம் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிரேஷ்ட பிரஜைகளுக்கான மாதக் கொடுப்பனவு 3000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விசேட தேவையுடையவர்கள், நீரிழிவு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாத கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

அஸ்வெசும பலன்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படும், தகுதியுள்ள பயனாளிகளுக்கு கடந்த காலத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை.

ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோய் உதவித்தொகை 2,500 ரூபாவினால் அதிகரிக்கப்படும்.

முதியோருக்கான மாதாந்த உதவித்தொகை 3000 ரூபா வரை அதிகரிக்கப்படும்.

புதிய குடும்பங்கள் பயனாளிகள் பட்டியலில் தாமதமின்றி இணைத்துக்கொள்ள 06 மாதங்களுக்கு ஒரு முறை, அஸ்வெசும பயனாளிகளின் பட்டியல் மதிப்பாய்வு செய்யப்படும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
26 696cda61cd108
செய்திகள்அரசியல்இலங்கை

எம்.பி-க்களின் ஓய்வூதிய ரத்து: உயர் நீதிமன்ற விசாரணை நிறைவு; இரகசியத் தீர்ப்பு சபாநாயகருக்கு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்...

electrician at work stockcake
செய்திகள்இலங்கை

இனி எலக்ட்ரீஷியன்களுக்கு உரிமம் கட்டாயம்! NVQ தகுதி இன்றி மின் வேலைகள் செய்யத் தடை!

இலங்கையில் மின் பாதுகாப்பு மற்றும் பொறியியல் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், மின்சார வல்லுநர்களுக்கான (Electricians) புதிய...

articles2Fr9PnSL7cktbisfxCs5bm
செய்திகள்உலகம்

உலக சுகாதார அமைப்பிலிருந்து இன்று (22) உத்தியோகபூர்வமாக விலகியது அமெரிக்கா! நிதி நெருக்கடியில் WHO!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் உலக...

Mweb Maldives 630x375 1
செய்திகள்உலகம்

மாலைத்தீவு நாட்டினருக்கு நற்செய்தி: இலங்கைக்கு வர 90 நாள் விசா விலக்கு அளிப்பு!

வருகை அல்லது சுற்றுலா நோக்கங்களுக்காக இலங்கைக்கு வரும் மாலைத்தீவு குடிமக்களுக்கு 90 நாள் வருகை விசா...