இலங்கை

சகல மாணவர்களுக்கும் விசேட கல்வி: ஜனாதிபதி மகிழ்ச்சி தகவல்

Published

on

சகல மாணவர்களுக்கும் விசேட கல்வி: ஜனாதிபதி மகிழ்ச்சி தகவல்

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் சகல மாணவர்களுக்கும் விசேட செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், புதிதாக நான்கு பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் அறிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் புதிய பீடங்களை அமைக்க விசேட நிதி ஒதுக்கீடு. அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை அமைக்க சட்டத்தில் திருத்தம் செய்து இடமளிப்பு உள்ளிட்ட விடயங்களையும் ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.

மேலும், வர்த்தக வங்கிகள் ஊடாக மாணவர் கல்விக்கடன் – தொழில் கிடைத்த பின்னர் அவர்கள் மீள்செலுத்தக் கூடிய ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளது.

பல்கலை தகுதி பெறாத மாணவர்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு தொழில்வாய்ப்பு – அவர்களுக்கு விசேட பயிற்சியளிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அனைவருக்கும் பாடசலைகளில் விசேட ஆங்கிலக்கல்வி திட்டம் அறிமுகம் – மாணவர்களுக்கு சுரக்ஷா காப்புறுதித் திட்டம் மீண்டும் அறிமுகம் உள்ளிட்ட மேலும் பல திட்டங்களை ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.

தற்போது நாட்டில் பழமையான கல்வி முறைமை நடைமுறையில் உள்ளது. நவீன உலகுக்கு பொருத்தமான கல்வி முறைமை 2024 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டிலுள்ள சகலருக்கும் ஆங்கிலம் ‘திட்டத்துக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2034 ஆம் ஆண்டு சகலருக்கும் ஆங்கிலம் என்ற இலக்கு வெற்றி பெறும் என அவர் குறிப்பிடப்பட்டுள்ளர்.

Exit mobile version