rtjy 12 scaled
இலங்கைசெய்திகள்

புதிய கடற்றொழில் சட்டம் தொடர்பில் டக்ளஸ் விளக்கம்

Share

புதிய கடற்றொழில் சட்டம் தொடர்பில் டக்ளஸ் விளக்கம்

புதிய கடற்தொழில் சட்டம் இன்னும் உருவாக்கப்படாத நிலையில் சிலர் கடற்தொழில் மக்களை குழப்பும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

புதிய கடத்தொழில் சட்ட முன்மொழிவு தொடர்பில் பாரம்பரிய கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்படுவதாக யாழில் மீனவ சங்கங்களுக்கிடையிலான கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட விடயம் தொடர்பில் அமைச்சரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடற்றொழிலாளர்களை பாதிக்கும் வகையில் எந்த விதமான சட்டங்களும் புதிதாக இயற்றப்படவில்லை. கடந்த காலங்களை இயற்றப்பட்ட சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மீனவ மாவட்டங்களில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

ஆனால் யாழ்ப்பாணத்தில் சிலர் கடற்றொழிலாளர்களை பாதிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படுவதாகவும் வெளிநாட்டு படகுகளை இலங்கை கடற்பரப்புக்குள் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்படப்போவதாக கூறியதாக அறிந்தேன்.

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டம் சகல மீன்பிடி மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும். அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பில் விவாதம் இடம்பெற்றதன் பின் திருத்த வேண்டிய விடயங்கள் இருந்தால் திருத்தப்பட்டு சட்டமாக்கப்படும்.

ஆனால் சிலர் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து பணத்தை பெற்று மீனவ சங்கங்களுடன் கலந்து ரையாடல் என்ற போர்வையில் புதிய கடற்தொழில் சட்டம் தயாரிக்கப்பட்டு விட்டதாக மீனவ சங்கங்களை குழப்பி வருகின்றனர்.

ஆகவே பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கினங்க கடற் தொழில் மக்களை பாதிக்காத வகையில் புதிய சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...