இலங்கை
பொலிஸ் நிலையத்தில் நிகழ்ந்த விபரீதத்தால் ஏற்பட்ட ஆபத்து
பொலிஸ் நிலையத்தில் நிகழ்ந்த விபரீதத்தால் ஏற்பட்ட ஆபத்து
சிலாபம் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 26ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் நந்தசேன என்ற கான்ஸ்டபிள் காயமடைந்துள்ளார்.
கடமையை முடித்துக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள், தனது துப்பாக்கியை பொலிஸ் ஆயுதக் களஞ்சியத்தில் ஒப்படைக்கச் சென்று கொண்டிருந்த போது அது தரையில் விழுந்துள்ளது.
கீழே விழுந்த துப்பாக்கி இயங்கியதால் அருகில் இருந்த அதிகாரி ஒருவர் துப்பாக்கி சூடு பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சிலாபம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.