3 11 scaled
இலங்கைசெய்திகள்

தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Share

தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருக்கும் வைத்திய அதிகாரிகளை தக்கவைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை அறிவித்துள்ளது.

மூளை வடிகால் பற்றிய அழுத்தமான பிரச்சினைக்கு சுகாதார அமைச்சகம் பாராமுகம் காட்டுவதாக அந்த சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த நிலையில், நவம்பர் 1ஆம் திகதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை, முக்கியஸ்தர்களின் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான நடமாடும் நோயாளர் காவு வாகனச் சேவைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளது.

மேலும்,மறு அறிவிப்பு வரும்வரை வைத்தியசாலை கடமைகளுக்கு வெளியே திட்டமிடப்பட்ட நடமாடும் வைத்திய முகாம் உட்பட அதனுடன் தொடர்புடைய பிற கடமை நடவடிக்கைகளில் இருந்து விலகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

அத்துடன் நவம்பர் 1ஆம் திகதிக்கு பின்னர் மாகாண அளவிலான தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடங்கப் போவதாகவும் சங்கம் எச்சரித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...