இலவச விசா : இலங்கை எடுத்துள்ள நடவடிக்கை
ஏழு நாடுகளின் பிரஜைகளுக்கு விசா இல்லாமல் இலங்கைக்கு பிரவேசிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இது தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒரு முன்னோடி செயற்றிட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி(2024) வரை நடைமுறையில் இருக்கும்.
இதன்படி, இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இன்றி இலங்கைக்கு பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.