rtjy 274 scaled
இலங்கைசெய்திகள்

பிரான்ஸ் செல்ல முயன்ற யாழ் இளைஞனை மீட்க கோரிக்கை

Share

பிரான்ஸ் செல்ல முயன்ற யாழ் இளைஞனை மீட்க கோரிக்கை

பிரான்ஸ்க்கு செல்வதற்காக முகவர் ஒருவரை நம்பி சென்ற யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த ஒருவர் லெபனான் நாட்டின் சிறையில் உள்ளதாகவும் அவரை மீட்டு தருமாறும் குடும்பத்தினரால் உருக்கமான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்புத்துறை, வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் சயந்தன் என்ற இளம் குடும்பஸ்தரே முகவரை நம்பி ஏமாற்றமடைந்த நிலையில் லெபனான் நாட்டின் சிறையில் சிக்கியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்கு முகவர் ஒருவரை நம்பி லெபனான் ஊடாக பிரான்ஸ் செல்வதற்காக இருந்த போது உரிய ஆவணங்கள் இல்லை என்பதற்காக கைது செய்யப்பட்டு லெபனான் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், குடும்ப வறுமை காரணமாக பிரான்ஸ் செல்வதற்காக எனது கணவர் கடந்த ஜுன் மாதம் இலங்கையில் இருந்து புறப்பட்டார். ஐந்து மாதங்கள் ஆகியுள்ள நிலையில் லெபனான் நாட்டின் சிறையில் உள்ளார்.

இந்நிலையில் லெபனான் அருகில் உள்ள இஸ்ரேல் நாட்டில் யுத்தம் இடம்பெறுவதால் எனது கனவனை குறித்து அச்சம் அதிகரித்துள்ளது. குடும்ப வறுமை என்றாலும் எனது கணவர் எனக்கு முக்கியம். எனது கணவரை நாட்டுக்கு கொண்டுவர உரிய தரப்புக்கள் உதவ வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 2
செய்திகள்விளையாட்டு

ஒருநாள் தொடர்: டக்வத் லூயிஸ் முறையில் ஆஸ்திரேலியா அபார வெற்றி.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில், டக்வத் லூயிஸ் முறைப்படி (D/L Method)...

1760884555 Paris Louvre Museum Sri Lanka 6
செய்திகள்உலகம்

உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் திருட்டு: பாரிஸில் அருங்காட்சியகம் மூடல்!

பாரிஸில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான, உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் (Louvre Museum) திருட்டுச்...

IMG 20251018 WA00431 vb 16
செய்திகள்இந்தியா

கரூர் உயிரிழப்பு: 41 குடும்பங்களுக்கு நிவாரணம் அனுப்பிய விஜய்! 

கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் பிரசாரக் கூட்டத்தில்...

25 68f5bd64c9d96
செய்திகள்இலங்கை

ஓரியோனிட்ஸ் விண்கல் மழை இன்று இரவு இலங்கை வான்பரப்பில் காண வாய்ப்பு!

இலங்கையின் வான் பரப்பிலும் இன்று (அக்டோபர் 20) இரவு விண்கல் மழை பொழிவைப் பார்வையிட மக்களுக்கு...