இலங்கை
பேருந்துகளை அலங்கரிக்க இடமளிக்கப்பட வேண்டும்
பேருந்துகளை அலங்கரிக்க இடமளிக்கப்பட வேண்டும்
மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத சில விதிமுறைகளுக்கு உட்பட்ட வகையில் பேருந்துகளை அலங்கரிக்க அனுமதி வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பேருந்து உரிமையாளர்களுக்கும் நாமல் ராஜபக்சவிற்கும் இடையில் நேற்று(19.10.2023) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், பேருந்துகளை அலங்கரிப்பது ஒரு தனித்தொழில் அதேபோன்று ஒரு கலை எனவும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத பட்சத்தில் பேருந்துகளை அலங்கரிப்பதில் பிரச்சினை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் போக்குவரத்து விதிகளை மீறும் சட்டங்கள் மற்றும் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் அதே வழியில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அலங்கார வேலைகளில் ஈடுபட்டுள்ள பேருந்துகளுக்கு நிவாரணம் வழங்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.