இலங்கை
உயிரை பணயம் வைத்து பிள்ளையை காப்பாற்ற முயன்ற தாய்
உயிரை பணயம் வைத்து பிள்ளையை காப்பாற்ற முயன்ற தாய்
அனுராதபுரத்தில் தோட்டமொன்றில் உள்ள கிணற்றில் விழுந்த தாயும் அவரது மூன்று மாத பெண் குழந்தையும் மீட்கப்பட்டுள்ளனர். எனினும் குழந்தை உயிரிழந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தாயான சந்தருவனி பிரார்தனா மற்றும் அவரது 3 மாத கைக்குழந்தை ஆகியோர் கிணற்றில் விழுந்துள்ளனர்.
பிரதேசவாசிகளால் குறித்த பெண் வசிக்கும் வீட்டில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் பிரதேசவாசிகள் அவசர அழைப்புப் பிரிவு 1990 க்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதுடன் அம்புலன்ஸ் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு ஆபத்தான நிலையில் குறித்த பெண் கலென்பிந்துனுவெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த பெண் பிரசவம் முடிந்து தனது தந்தை வசிக்கும் வீட்டிற்கு வந்து தங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.
வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில் உள்ள கிணற்றுக்கு சென்று குழந்தைக்கு பால் கொடுத்த போது குழந்தை கிணற்றில் விழுந்ததாக தாய் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குழந்தையை காப்பாற்ற தானும் கிணற்றில் குதித்ததாக தாய் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.