இலங்கை

ரணிலுக்கு புகழாரம் சூட்டிய கோட்டாபய

Published

on

ரணிலுக்கு புகழாரம் சூட்டிய கோட்டாபய

“இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களை அடியோடு நிராகரித்து – சர்வதேச விசாரணைகளுக்கு அனுமதி இல்லை என பகிரங்கமாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பாராட்டுகின்றேன்.” என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“ஜனாதிபதிப் பதவியிலிருந்து நான் விலகியபோது புதிய ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவைப் பரிந்துரைத்திருந்தேன். அதற்கமைய நாடாளுமன்றம் அவரைப் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்தது.

ரணில் விக்ரமசிங்க முதுகெலும்பு உள்ள சிறந்த தலைவர் என்பதை அவர் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நிரூபித்துக் காட்டி வருகின்றார்.

இலங்கை இறைமையுள்ள நாடு. இங்கு வெளிச்சக்திகளின் தலையீடுகளுக்கு இடமில்லை. நாடாளுமன்றத்தை மீறி எவரும் முடிவுகளை எடுக்க முடியாது.

நாடாளுமன்றத் தீர்மானங்களுக்கு மதிப்பளித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருகின்றார். உண்மையில் அவர் சிறந்த தலைவர்.” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version