வெளியேறிய நீதிபதி சரவணராஜா: கொழும்பில் போராட்டத்தில் சட்டத்தரணிகள்

tamilni 75

வெளியேறிய நீதிபதி சரவணராஜா: கொழும்பில் போராட்டத்தில் சட்டத்தரணிகள்

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு நீதிகோரி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொழும்பு – புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்னால், பெருமளவான சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து இன்று இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

”நீதித்துறை மீது கை வைக்காதே” என்னும் தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன்போது, ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே.வி.தவராசா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பெருமளவான சட்டத்தரணிகள் இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

புதியதை சேர்

Exit mobile version