இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் முறைமையில் மாற்றம்

rtjy 130 scaled
Share

நாடாளுமன்றத் தேர்தல் முறைமையில் மாற்றம்

நாடாளுமன்றத் தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதற்கான அரசமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதற்கான விசேட அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரசின் சார்பில் நீதி மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் அதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தேச அரசமைப்பு திருத்தத்தின்படி, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 160 பேர் தொகுதி அளவில் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

எஞ்சிய 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய அல்லது மாகாண மட்டத்தில் விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, அரசமைப்பு திருத்தத்தை மேற்கொள்வதற்கு அரசு எதிர்பார்த்துள்ள நிலையில், அமைச்சரவையின் அனுமதியை வழங்குமாறு நீதி அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போதைய அரசமைப்பின்படி, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 196 பேர் விகிதாசார அடிப்படையில் மாவட்ட மட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

எஞ்சியுள்ள 29 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சிகள் பெற்ற வாக்குகளின் வீதத்துக்கு ஏற்ப அந்தந்த கட்சிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...