rtjy 115 scaled
இலங்கைசெய்திகள்

பயணப் பாதையை மாற்றிய ரணில்

Share

பயணப் பாதையை மாற்றிய ரணில்

மட்டக்களப்பு நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு அஞ்சி பிரதான வீதியுடாக செல்வதை தவிர்த்து ஊர்வீதிகளுக்குள்ளால் பயணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை காணிகள் பெரும்பான்மை சிங்களவர்களினால் அபகரிக்கப்படுவதற்கு எதிராக கடந்த 23நாட்களாக கால்நடை பண்ணையாளர்கள் போராடிவருகின்றனர்.

இந்த நிலையில் மட்டக்களப்புக்கு வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க நேற்றும் இன்றும் மட்டக்களப்பு பாசிக்குடாவில் தங்கியிருந்து இரண்டு பாடசாலை நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

அந்த வகையில் நேற்றைய தினம்(07.10.2023) மட்டக்களப்பு நகரில் உள்ள பாடசாலையொன்றுக்கு ஜனாதிபதி வருகை தந்திருந்தார்.

இந்நிலையில், அந்த வீதியால் பெருமளவான பொலிஸார் போராட்டம் நடைபெறும் இடங்களில் குவிக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

பல பொலிஸ் நிலையங்களிலிருந்து பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பெருமளவான பொலிஸ் அதிகாரிகளும் வருகைதந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அடிக்கடி ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினரும் வருகைதந்து போராட்டம் நடைபெறும் இடத்தினை பார்வையிட்டுச்சென்றதுடன் பொலிஸ் அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளனர்.

இதேவேளை திடீரென போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்ற பொலிஸார் போராட்டத்தின் முன்பாக வரிசையில் நின்று பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளனர்.

இதன்போது உடனடியாக பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸாரை அங்கிருந்துசெல்லுமாறு உயரதிகாரிகளினால் பணிக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி உள்வீதியினால் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு சென்றதாக கூறப்பட்டுள்ளது.

“ஒரு நாட்டின் மக்கள் தமது பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கும் நிலையில் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கமுடியாமல் செல்லும் ஜனாதிபதியினால் நாட்டின் பிரச்சினையை எவ்வாறு தீர்க்க முடியும்” என போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...