இலங்கையின் சுங்க அதிகாரிகளிடம் சிக்கிய கனடா பொதிகள்

rtjy 90

இலங்கையின் சுங்க அதிகாரிகளிடம் சிக்கிய கனடா பொதிகள்

கனடாவில் இருந்து கொழும்பு பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு பரிசாக அனுப்பப்பட்ட மூன்று பொதிகளில் இருந்து பெருந்தொகையான போதைப்பொருளை இலங்கை சுங்கப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், 16 கிலோ குஷ் போதைப்பொருளும் 01 கிலோ ஐஸ் போதைப்பொருளுமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மருந்துகள் மூன்று மரப் பொதிகளில் அடைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

மேலும், குறித்த போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 122 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version