Connect with us

இலங்கை

ரணிலும் ஒரு காரணம்! கடும் தொனியில் சாணக்கியன் சாடல்

Published

on

rtjy 53 scaled

ரணிலும் ஒரு காரணம்! கடும் தொனியில் சாணக்கியன் சாடல்

உலக நாடுகள் இலங்கையை இரண்டாம் தர நாடாக கருதுவதற்கு ஐந்து தடவைகள் பிரதமராக இருந்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஒரு முக்கிய காரணம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த அவர் நாடாளுமன்றில் தெரிவித்ததாவது, ஜனாதிபதி என்ன அடிப்படையில் ஆசிய நாட்டவர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளா என என்ன அடிப்படையில் வினவினார் என எனக்கு தெரியாது.

அந்த ஊடகவியலாளர் எம்மை இரண்டாம் தரப் பிரஜை என எண்ணியிருந்தால் ஐந்து தடவைகள் பிரதமராக இருந்துள்ளீர்கள். நீங்களும் பிரச்சினையின் ஒரு பகுதி.

உலகிலுள்ள எந்தவொருவராவது நாம் இரண்டாம் தரப் பிரஜைகள் என எண்ணுவார்கள் ஆயின், அவ்வாறு எண்ணுவதற்கு நீங்களும் ஒரு காரணம்.

தொடருந்தை எடுத்துக்கொண்டால், முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு என உள்ளது.

எனினும் சிலர் திருட்டுத்தனமாகவும் பயணம் செய்கின்றனர். நாங்கள் திருட்டு தனமாக பயணம் செய்வோரின் பட்டியலில் இருக்கின்றோம். அந்த நிலைமையை யார் ஏற்படுத்தியது.

சர்வதேச ரீதியாக நடைபெறும் மாநாடு மற்றும் சந்திப்புக்களுக்கு நாம் செல்லும் போது, நீதிபதிக்கு பாதுகாப்பில்லாமல் வெளியேறும் நாட்டில் இருந்து வருகின்றீர்களா என கேட்கின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினரால் அச்சுறுத்தப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்தால் அழுத்தம் பிரயோகிக்கப்படும் நாட்டில் இருந்து தானே நீங்கள் வருகின்றீர்கள் என கேட்கின்றனர்.

அங்கு சென்று நாம் இரண்டாம் தரப் பிரஜைகளாக என கேட்டு, நாட்டை நியாயப்படுத்துவதில் பயனில்லை. நீங்கள் செய்யும் இவ்வாறான செயல்களால் தான் இந்த நிலைமை ஏற்படுகின்றது.

பிரகீத் எக்னலிகொட காணாமல் போன்றுடன் 5 ஆயிரத்து 1 நாட்கள் நிறைவடைந்துள்ளன. பிரகீத் எங்கே என நாடாவிய ரீதியில் உள்ளவர்கள் கேட்டுகின்றனர்.

பிரகீத் எக்னலிகொடவிற்கு என்ன நடந்தது என்பதை கூறுவதற்கு தாம் தயாராக இருப்பதாக கூறுகின்றார். எனினும் ஜனாதிபதி என்ன கூறுகின்றார்.? சர்வதேச விசாரணை தேவையில்லை என கூறுகின்றார்.

அவ்வாறு இருக்கும் போது எமக்கு எவ்வாறான பெயர் கிடைக்கும். பிரகீத் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக சர்வதேச விசாரணை தேவையில்லை என கூறுவிட்டு வந்திருக்கின்றார்.

நாம் இரண்டாம் தரப் பிரஜையான என கேள்வி, கேட்டு தேசிய ரீதியாக கெத்தான விடயத்தை செய்யவில்லை. மாறாக , இலங்கைக்கு இருக்கும் அவப்பெயரை உறுதிப்படுத்திவிட்டே வந்திருக்கின்றீர்கள்.

அதிகாரத்திற்கு வருவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தி, சுமார் 300 பேரை பலியெடுத்த நாட்டில் இருந்து தானே வருகின்றீர்கள் என கேட்கின்றனர். முன்னர் உலக கிண்ணத்தை வெற்றிகொண்ட, சிறிய, அழகான தீவு என்றே இலங்கையை அடையாளப்படுத்தினர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திவிட்டு, அதனை மூடிமறைக்கும் வகையில் ஜனாதிபதி, சர்வதேச விசாரணையை வேண்டாம் என கூறும் நாடு தானே இலங்கை என கூறுகின்றனர். அவ்வாறு தான் கேட்கின்றனர்.

லசந்த விக்ரமதுங்கவை ரிப்பொலி பிளட்ரூனுடன் சேர்ந்து எவ்வாறு கொலை செய்தோம் என்பதை வாக்குமூலமாக வழங்க தாம் தயார் என அசாத் மௌலானா கூறுகின்றார். விசாரணை செய்வதற்கு முடியாது என ஜனாதிபதி கூறுகின்றார்.

மிக் கொள்வனவில் திருடிய முன்னாள் பாதுகாப்பு செயலாளரை பாதுகாக்கும் ஜனாதிபதி உள்ள நாட்டே உங்களது இலங்கை என கேட்டுகின்றனர். நாம் எவ்வாறு பதில் வழங்குவது. உலகிலுள்ள நாடுகள், எம்மை ஏன் இரண்டாம் தரப் பிரஜைகளாக கருதுகின்றனர் என்பதற்கு பல உதாரணங்களை என்னால் கூற முடியும் என்றார்.

Advertisement

ஜோதிடம்

tamilni 109 tamilni 109
ஜோதிடம்15 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 08.12.2023 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 08.12.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் டிசம்பர் 08, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 22 வெள்ளி கிழமை, சந்திரன்...

rtjy 35 rtjy 35
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 07.12.2023 – Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 07.12.2023 – Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை...

tamilni 81 tamilni 81
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 06.12.2023 – Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 06.12.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் டிசம்பர் 06, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 20 புதன் கிழமை, சந்திரன்...

rtjy 32 rtjy 32
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 05.12.2023 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 05.12.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் டிசம்பர் 05, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 19 செவ்வாய்க் கிழமை, சந்திரன்...

rtjy 19 rtjy 19
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 04.12.2023 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 04.12.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் டிசம்பர் 04, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 18 திங்கள் கிழமை, சந்திரன்...

tamilni 27 tamilni 27
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 03.12.2023 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 03.12.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் டிசம்பர் 03, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 17 ​ஞாயிற்று கிழமை, சந்திரன்...

rtjy rtjy
ஜோதிடம்7 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 02.12.2023 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 02.12.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் டிசம்பர் 02, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 16 சனிக் கிழமை, சந்திரன்...