தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி

rtjy 73

தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி

இலங்கையில் நான்கு தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு வெளியில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட வேண்டும் எனவும் அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் மருத்துவ படிப்பை மேற்கொள்ள இலங்கை மாணவர்கள் ரஷ்யா, உக்ரைன் போன்ற நாடுகளுக்கு சென்று வந்தனர்.

தற்போது இலங்கையில் தனியார் மருத்துவ கல்லூரிகள் நிறுவப்பட உள்ளமையால் அவர்கள் இங்கேயே கல்வியை தொடரும் வாய்ப்பு கிட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version