இலங்கை

வடக்கில் சிங்கள மக்களின் குடியேற்றம் தொடர்பில் சரத் வீரசேகர

Published

on

வடக்கில் சிங்கள மக்களின் குடியேற்றம் தொடர்பில் சரத் வீரசேகர

யுத்தத்தை தொடர்ந்து வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட 400க்கும் அதிகமான பௌத்த தொல்பொருள் சின்னங்களுள் அதிகளவானவை தற்போது அழிக்கப்பட்டுள்ளாதாக நாடாளுமன்ற உறுப்பினரும் கடும்போக்குவாத சிங்கள அரசியல்வாதியுமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் கோப் தெரிவு குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக நேற்று (04.10.2023) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கிலுள்ள சிங்கள தொல்பெருள் சின்னங்கள் தொடர்ந்தும் அழிக்கப்பட்டு வருகின்றன.

தொல்பொருள் திணைக்களத்தின் சட்டங்களை வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்த அந்த திணைக்களத்தினருக்கு அதிகாரம் இல்லை. அச்சுறுத்தல்கள் மற்றும் எச்சரிப்புக்கள் விடுக்கப்படுவது காரணமாக இந்த நிலை உருவாகியுள்ளது.

வடக்கிலிருப்பது வேறு ஒரு நாடா என நான் கேட்க விரும்புகிறேன். அத்துடன், சிங்கள மக்களுக்கு வடக்கில் குடியேற எந்த அனுமதியும் இல்லை.

அவர்களுக்கு அங்கு வாழவே, தமக்கான காணியொன்றை வாங்கவோ வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கவோ அனுமதி இல்லை. முஸ்லீம் மக்களுக்கும் இதே நிலை தான் என சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
..

Exit mobile version