இலங்கை

மின்விசிறியில் மோதுண்டு மாணவன் பலி

Published

on

மின்விசிறியில் மோதுண்டு மாணவன் பலி

புஸ்ஸல்லாவை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில், வகுப்பறையின் கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியில் மோதுண்டு, பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பாடசாலை மைதானத்தில் நேற்றைய தினம்(04.10.2023) சிறுவர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது, குறித்த மாணவன் வகுப்பறைக்கு சென்று, சக மாணவர்களுடன் மேசை மீது ஏறி விளையாடியபோது, இயங்கிக்கொண்டிருந்த மின்விசிறியில் மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காயமடைந்த மாணவர் புஸ்ஸல்லாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் உயிரிழந்தவர் கிலென்லொக் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் புஸ்ஸல்லாவை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version