கொத்து உள்ளிட்ட உணவுப் பொதிகளின் விலை அதிகரிப்பு

tamilni 70

கொத்து உள்ளிட்ட உணவுப் பொதிகளின் விலை அதிகரிப்பு

கொத்து மற்றும் தேநீர் உள்ளிட்ட உணவுப் பொதிகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு விலை அதிகரிப்பின் காரணமாக இவ்வாறு உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன் கொத்து ரொட்டியின் விலையை 20 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதிய உணவுப் பொதி ஒன்றின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அந்த சங்கம் அறிவித்துள்ளது.

 

Exit mobile version