வெளிநாட்டிலுள்ள மனைவிக்காக இலங்கையில் உயிரை விட்ட கணவன்

rtjy 12

வெளிநாட்டிலுள்ள மனைவிக்காக இலங்கையில் உயிரை விட்ட கணவன்

தலாத்துஓய – மொரகொல்ல பிரதேசத்தில் காணாமல் போயிருந்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 24ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த 30 வயதான இளைஞனின் சடலம் தனியார் காணியில் உள்ள முள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிரதேசவாசிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நிரந்தர தொழில் இல்லாத ருவன் சந்தகுமார என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனுக்கு திருமணமாகியுள்ள நிலையில் மனைவி வெளிநாட்டில் பணிக்காக சென்றுள்ளார்.

மனைவி இல்லாமல் மனவேதனையில் இருந்த அவர் தூக்கிட்டு உயிரை மாய்த்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பிரேதப் பரிசோதனை கண்டி பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

சம்பவம் தொடர்பில் தலத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version