ரணில் – ராஜபக்ச அரசால் சட்ட ஆட்சி செயலிழப்பு
இலங்கையில் நீதித்துறை சுதந்திரத்தை இழந்துவிட்டது. நாட்டில் சட்டத்தின் ஆட்சி வேண்டுமெனில் இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதே ஒரே வழி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், அன்று பிரதம நீதியரசர் ஷிராணியை வீட்டுக்கு அனுப்பினார்கள் ராஜபக்சக்கள். இன்று நீதிபதி சரவணராஜாவை நாட்டை விட்டு வெளியேற்றி உள்ளார்கள் ரணில் – ராஜபக்சக்கள்.
இப்படியான ஆட்சியாளர்கள் தேவையா என்பதைப் நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
இந்த அரசு நீடித்தால் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை எதிர்பார்க்கவே முடியாது.
எனவே, ஆட்சி மாற்றத்துக்கான பயணத்தில் சகல மக்களும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைகோர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.