புதிய பொலிஸ் மா அதிபரை நியமிக்கவுள்ள ரணில்

rtjy 13

புதிய பொலிஸ் மா அதிபரை நியமிக்கவுள்ள ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த மாதம் புதிய பொலிஸ் மா அதிபரை நியமிக்கவுள்ளார்.

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவிற்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட மாட்டாது என பொலிஸ் ஆணைக்குழு ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளதை அடுத்தே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

பொலிஸ் ஆணைக்குழு சந்தன விக்கிரமரத்னவின் பதவிக் காலத்தை ஜூலை 9 முதல் மூன்று மாத காலத்திற்கு நீடித்தது.

இதன்படி இந்த இரண்டாவது பதவிக்காலம் அக்டோபர் 9 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில், புதிய பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதி நியமிக்கவுள்ளார்.

Exit mobile version