நாமல் ராஜபக்சவின் எதிர்கால அரசியல் குறித்து மகிந்த தகவல்

rtjy 315

நாமல் ராஜபக்சவின் எதிர்கால அரசியல் குறித்து மகிந்த தகவல்

அடுத்து வரும் தேர்தலில் நாமே வெற்றிபெறுவோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வருமான நாமல் ராஜபக்சவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகவியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த, நாமல் ராஜபக்சவுக்கு இன்னும் வயது உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எந்த நேரத்திலும் தேர்தலுக்கு பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும், அதற்காக அச்சம் இல்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதன்போது சுட்டிக்காட்டினார்.

Exit mobile version