இலங்கை

திடீரென யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுத்துள்ள மக்கள்!

Published

on

திடீரென யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுத்துள்ள மக்கள்!

நாட்டில் நேற்று மற்றும் இன்று ஆகிய தினங்கள்(வியாழன்28, மற்றும் வெள்ளி29) விடுமுறை தினங்கள் என்பதாலும், அதனுடன் இணைந்து வார இறுதி நாட்கள் வருவதாலும் நீண்ட விடுமுறை காணப்படுகின்றது.

இந்தநிலையில், இந்த நீண்ட விடுமுறை நாட்களில் பெருமளவான சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்துள்ளனர்.

குறிப்பாக, யாழ்ப்பாணத்தின் நயினாதீவு விகாரைக்கும், நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்திற்கும் இன்று மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகைத் தந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் நயினாதீவு நோக்கி பயணிக்கும் மக்கள் குறிகட்டுவானில் பேருந்துகளை நிறுத்திவிட்டு படகு சேவைக்காக நீண்ட நேரம் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட சில படகுகள் இன்று படகு சேவையை மேற்கொண்டாலும் பயணிகளை ஏற்றி இறக்குவதில் பெரும் தாமதமான நிலை காணப்பட்டுள்ளது.

அதிகப்படியான மக்கள் யாழ்ப்பாணம் நயினாதீவு நாக விகாரை, நாக பூசணி அம்மன் ஆலயத்திற்கு பயணம் மேற்கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.

குறிப்பாக தமிழ் – சிங்கள மக்கள் இன்றைய பவுர்ணமி நாளில் அம்மனுக்கும் நாகவிகாரைக்கும் வழிபாட்டுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version