rtjy 262 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலுக்கு 2029 வரை வாய்ப்பில்லை

Share

ரணிலுக்கு 2029 வரை வாய்ப்பில்லை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நிர்வாகத்தில் ஒருசில குறைபாடுகள் காணப்பட்டாலும் அவர் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தினார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை தற்காலிக ஜனாதிபதியாகவே தெரிவு செய்துள்ளோமே தவிர 2029ஆம் ஆண்டு வரை பதவியில் இருப்பதற்கல்ல என்றும் அவர் கூறினார்.

அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பத்தை எதிர்க்கட்சியினர் தங்களின் அரசியல் பிரசாரத்துக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் இடம்பெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் அரசியல் சேறு பூசல்களை மாத்திரம் இலக்காக கொண்டிருந்தார்கள்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் தேர்தல் வெற்றியை உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புப்படுத்தி எதிர்க்கட்சியினர் பாரதூரமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நிர்வாகத்தில் ஒருசில குறைபாடுகள் காணப்பட்டாலும் அவர் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தினார் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கூட்டணியமைத்து தேர்தல்களில் போட்டியிட பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக ஆளும் தரப்பின் ஒருசிலர் குறிப்பிடுவது அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடே தவிர கட்சியின் நிலைப்பாடல்ல.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தற்காலிக ஜனாதிபதியாகவே தெரிவு செய்துள்ளோமே தவிர 2029 ஆம் ஆண்டு வரை பதவியில் இருப்பதற்கல்ல என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் கொள்கைக்கும் பொதுஜன பெரமுனவின் அரசியல் கொள்கைக்கும் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

மாறுப்பட்ட அரசியல் கொள்கைகளை கொண்டுள்ள இரு கட்சிகளும் கூட்டணியமைத்து அரசாங்கத்தை அமைத்தால் நல்லாட்சி அரசாங்கத்தின் நிலைமையே தோற்றம் பெறும்.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைத்து போட்டியிட இதுவரை தீர்மானிக்கவில்லை.

கட்சியின் கொள்கைகளை முன்னிலைப்படுத்தி தனித்து போட்டியிடவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ளோம் என குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...