பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக
தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் “பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!” எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக்காட்சியகம் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் நேற்று (22.09.2023) மாலை மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் பிரதான தூபி முன்றலில் மலரஞ்சலி செலுத்தி ஆரம்பமாகியதுடன், வரலாற்று ஆவணக்காட்சியகத்தை மாவீரர்களின் தாய் சுடரேற்றி ஆரம்பித்து வைத்துள்ளார்.
தியாக தீபம் திலீபனின் வரலாற்று புகைப்படங்கள் என்பன தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
- dhileepan
- eelam thileepan
- jaffna
- lt. col. thileepan
- ltte thileepan
- ltte thileepan speech
- remembering thileepan
- sri lanka
- Sri Lanka Politician
- tamil porali thileepan
- Thileepan
- thileepan anna
- thileepan cause of death
- thileepan death
- thileepan fast-unto-death
- thileepan fasting
- thileepan film
- thileepan protest
- thileepan remembrance
- thileepan speech
- thileepan sri lanka
- thileepan statue
- thileepan status
- thileepan story
- thiyagi thileepan
- tribute to thileepan
- Tyaga Deepam Dileepan S Archives
- who is thileepan