இலங்கைசெய்திகள்

கஜேந்திரன் எம்.பி. மீது தாக்குதல் நடத்தியவர்களை உடன் கைது செய்க!

tamilni 204 scaled
Share

திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது மிலேச்சத்தனமான முறையில் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்த வேண்டும். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

திருகோணமலையில் நேற்று (17) தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி மீது தாக்குதல் மேற்கொண்ட சிங்களக் காடையர் கும்பல், அந்த ஊர்தியில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதும் கற்கள், கொட்டன்கள் மற்றும் ஹெல்மட் கொண்டு கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கருத்து வெளியிடும்போதே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது பொலிஸார் முன்னிலையில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இந்தத் தாக்குதல் நடத்தியவர்களை இலகுவில் அடையாளம் காணும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்துமாறும் வலியுறுத்துகின்றோம்.” – என்றார்.

Share
Related Articles
10 11
இலங்கைசெய்திகள்

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

இலங்கை உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரசார வருமான மற்றும் செலவுகள் தொடர்பான அறிக்கைகள் எதிர்வரும் 28 ஆம்...

8 11
உலகம்செய்திகள்

இரவில் நடந்த திடீர் தாக்குதல்! இந்திய-பாகிஸ்தான் எல்லையில் அடங்காத சத்தம்

இந்தியா-பாகிஸ்தான் மோதல் இன்று உலக அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்திய மற்றும் பாகிஸ்தான்...

7 11
உலகம்செய்திகள்

அதிகரித்து வரும் போர் பதற்றம்! தாக்குதலை தொடங்கிய இந்திய கடற்படை

அண்டை நாடான பாகிஸ்தானின் தாக்குதலுக்குப் பிறகு, அரேபிய கடலில் பல இலக்குகளுக்கு எதிராக இந்திய கடற்படை...

6 12
இலங்கைசெய்திகள்

சமூக வலைத்தளம் மூலம் போலி காதல் – ஆண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

சமூக வலைத்தளம் மூலம் போலி காதல் உறவுகளை ஏற்படுத்தி ஆண்களிடம் கொள்ளையடிக்கப்படும் சம்பவம் தொடர்பில் செய்தி...