tamilni 205 scaled
இலங்கைசெய்திகள்

கஜேந்திரன் உட்பட பலர் மீது இராணுவ புலனாய்வாளர்களின் அடாவடி

Share

கஜேந்திரன் உட்பட பலர் மீது இராணுவ புலனாய்வாளர்களின் அடாவடி

திருகோணமலையில் தியாகதீபம் திலீபனை நினைவேந்தி அவரது உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப்பவனியை வழிமறித்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த குழுவினர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் திட்டமிடப்பட்டவை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டின் நினைவையொட்டி, திருகோணமலையிலிருந்து செப்டம்பர் 15 முதல் எழுச்சி ஊர்தி பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்து. இந்த அமைப்பின் பொதுச்செயலாளரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுமக்கள் அணிதிரண்டனர்.

நேற்று முன்தினம் திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்திப் பயணம் நேற்று மட்டக்களப்பு வாகரையில் நிறைவடைந்தது. மூன்றாவது நாளான நேற்று திருகோணமலை மூதூர் கட்டைபறிச்சான் பிரதேசத்தில் ஆரம்பித்த ஊர்திப் பவனி அங்கிருந்து ஆலங்கேணி தம்பலகாமம் ஊடாக திருகோணமலை நகருக்குள் பிரவேசித்தது.

இதன்போது திருகோணமலையில் தியாகதீபம் திலீபனை நினைவேந்தி அவரது உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப்பவனியை வழிமறித்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த குழுவினர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டதாகவும், இந்த தாக்குதலுக்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்க,புலனாய்வாளர்கள் அறிவுறுத்தல் வழங்க திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவமானது கடந்த சில தினங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டதாகவும்,ஊர்திப்பவனியை தொடர்ச்சியாக சிலர் பின்தொடர்ந்து குழப்பத்தினை ஏற்படுத்தி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பொலிஸார் செயற்படுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீது இலங்கையின் தேசிய கொடியை தாங்கியவாறு பெரும்பான்மை இனத்தை சேர்ந்த குழுவினர் தாக்குதல் நடத்திய போது இதனை தடுக்க முற்படாது தாக்குதல் மேற்கொள்பவர்களின் பின்னாலிருந்து தாக்குதலை தடுக்க முற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

25 690304e16a39e
அரசியல்இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: ஆயுதம் கோரிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், வெளிநாட்டிலிருந்து தற்காப்புக்காக மூன்று ஆபத்தான மிளகு ஸ்ப்ரேக்கள்...

25 690332f7d691e
இலங்கைஉலகம்செய்திகள்

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற இருப்பவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

2025 ஒக்டோபர் 27 ஆம் திகதி, கனடா அரசாங்கம் தனது Express Entry அமைப்பின் மாகாண...

25 690349f3051fc
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றில் கேலிக்கூத்து நடக்கிறது; வயது முதிர்ந்த ரணிலை விடுங்கள் – டயானா கமகே

ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் கட்சிக்குள் இளைஞர்களை சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு தலைமைப் பதவியை...