tamilni 206 scaled
இலங்கைசெய்திகள்

பயண பொதியில் சடலமாக மீட்கப்பட்ட நபர் யார்….!

Share

பயண பொதியில் சடலமாக மீட்கப்பட்ட நபர் யார்….!

சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிதிகொட பிரதேசத்தில் கடந்த 15ஆம் திகதி நீல நிற பயணப்பைக்குள் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிஸார் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அதற்கமைய, சிதைந்த நிலையில் காணப்பட்ட ஆண் நபரின் சடலம் மாரவில பிரதேசத்தில் போலி ஆவணம் தயாரிக்கும் வேலைவாய்ப்பு முகவருடையதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் பல்வேறு நபர்களை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி பலரிடம் பணம் மோசடி செய்தவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றிய நபர்களுக்கு பயந்து வசிப்பிடத்தை விட்டுத் தப்பிச் சென்றவர் என தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தடுகம் ஓயா கிதிகொட பாலத்தின் பயணப்பையில் கிடந்த சடலத்தில் தலை மற்றும் பல இடங்களில் பலத்த காயங்களுடன் காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நீண்ட கூந்தலுடன் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இறந்த நபர், பழுப்பு நிற காற்சட்டை மற்றும் கருப்பு சட்டை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...