மாதாந்தம் 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் போக்குவரத்து சபை

tamilni 199

நாட்டில் மாதாந்தம் சுமார் 100 பேருந்து நடத்துனர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதனால் அவர்களுக்கு பதிலாக புதிய நடத்துனர்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிய வருகையில், பல்வேறு மோசடி சம்பவங்கள் காரணமாக மாதாந்தம் சுமார் 100 பேருந்து நடத்துனர்களை பணிநீக்கம் செய்ய நேரிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

இதன் காரணமாக பேருந்து நடத்துனர்கள் 381 பேரையும் சாரதிகள் 912 பேரையும் புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

Exit mobile version