இலங்கை
நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிப்பு
நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிப்பு
இலஞ்சம் மற்றும் ஊழல் என்பது இப்போது நாட்டில் குற்றவியல் வருமானத்தை உருவாக்கும் இரண்டாவது மிக முக்கியமான சட்டவிரோத நடவடிக்கையாக மாறியுள்ளது.
இந்த செயற்பாடு, 2014 இல் ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது மூன்று இடங்களால் முன்னோக்கி வந்துள்ளதாக மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வாரம் வெளியிடப்பட்ட தேசிய பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு அபாய மதிப்பீட்டு அறிக்கையில் நிதிப் புலனாய்வுப் பிரிவு இதனை வெளிப்படுத்தியுள்ளது.
அதிகமான சம்பவங்கள் முறைப்பாடுகளாக பதிவாகியிருந்தாலும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மற்றும் விசாரணைகள் மூலம் குறைவான எண்ணிக்கையிலான வழக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குற்றவியல் வருமானத்தை உருவாக்கும் முதல் சட்டவிரோத செயற்பாடுகளாக போதைப்பொருள் மற்றும் சுங்கம் தொடர்பான குற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன.