rtjy 129 scaled
இலங்கைசெய்திகள்

திருகோணமலையில் பிக்கு ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல்

Share

திருகோணமலையில் பிக்கு ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல்

திருகோணமலை– பொரலுகந்த ரஜமஹா விகாரை அமைப்பதற்கு முன்னின்று செயற்பட்ட பௌத்த பிக்குவிற்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மொரவெவ- தெவனிபியவர இந்ரா ராம விகாரையின் விஹாராதிபதி பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமி நேற்றுமுன்தினம் (11.09 2023) ஆம் திகதி இம்முறைப்பாட்டினை செய்துள்ளார்.

அம்முறைப்பாட்டில் சொகுசு வெள்ளை வானில் நான்கு பேர் தனக்கு சொந்தமான இரண்டு விகாரைகளுக்கும் தேடிச் வந்ததாகவும், குறித்த வேனில் வருகை தந்தவர்கள் யார் என்று தெரியாது எனவும் தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அம்முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருகோணமலை இலுப்பை குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பொரலுகந்த ரஜமஹா விகாரையின் நிர்மாண பணிகளை இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னின்று செய்ததாகவும், அதனால் தனக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக மொரவெவ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், விகாரைக்கு வருகை தந்த வெள்ளை வான் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்று வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...