rtjy 74 scaled
இலங்கைசெய்திகள்

அடுத்த அரகலய இரத்த வெள்ளம்தான்: அம்மையார் எச்சரிக்கை

Share

அடுத்த அரகலய இரத்த வெள்ளம்தான்: அம்மையார் எச்சரிக்கை

அடுத்த அரகலய நிம்மதியாக இருக்காது. அது இரத்த வெள்ளமாக இருக்கும். மக்களின் கோபத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள் இவ்வாறு அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.

சிங்களத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சப்பாத்தாக நான் இருந்திருந்தால்கூட பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டிருப்பேன். தோல்விப் பயம் காரணமாக ரணில் விக்ரமசிங்க தேர்தலுக்குச் செல்லவில்லை.

நாட்டின் வீழ்ச்சியை ரணில் விக்ரமசிங்கவால் விரைவாகத் தடுத்து நிறுத்த முடிந்தது. ஆனால், ஊழல் அரசியல்வாதிகளுடன் இணைந்து பணியாற்றியதால் அவரால் முன்னேற முடியவில்லை.

ஊழல் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அரசில் உள்ளார்கள். ரணில் திருடுகின்றார் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், அவரைச் சுற்றியுள்ள அனைவரும் திருடுகின்றார்கள். உதாரணத்துக்குச் சுகாதார அமைச்சரைப் பாருங்கள். அவரின் அமைச்சில் ஊழல், மோசடி இடம்பெற்றுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற மருந்துகளால் மக்கள் இறந்துள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.

அவரை அமைச்சுப் பதவியில் இருந்து மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்திலிருந்தும் அகற்ற வேண்டும். அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வலுவான பிரேரணைகளைக் கொண்டு வர வேண்டும்.

ஊழல், மோசடியே நாட்டைப் பின்னுக்குத் தள்ளும். இவ்வாறான ஊழல், மோசடி வஞ்சகர்கள் அதிகாரத்தில் உள்ளார்கள்.

மக்கள் கோபமாக இருக்கின்றார்கள். கோட்டாபய ராஜபக்சவின் விலகலுக்குப் பின்னர் அவர்கள் எதிர்பார்த்தது நிறைவேறவில்லை. அடுத்த அரகலய நிம்மதியாக இருக்காது. அது இரத்த வெள்ளமாக இருக்கும். மக்களின் கோபத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள் என்றார்.

Share
தொடர்புடையது
BIA 692136
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம் – பயணிகளுக்கு கிடைத்துள்ள நன்மை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, பிரத்தியேகமாக தானியங்கி...

25 68f3aa6750683
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது! – தகவல் கசிவு குறித்து கவலை

யாழ்ப்பாணம் – மணியம் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் போதைப்பொருளுடன் நேற்று...

Estate
செய்திகள்இலங்கை

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு: கம்பனிகளின் புறக்கணிப்பால் குழப்பம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான சம்பள நிர்ணய சபை கூட்டம் நேற்று (அக்டோபர் 18)...

images 2
செய்திகள்இலங்கை

சந்திரிக்கா குமாரதுங்க காலமானதாகப் பரவும் செய்தி – பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க காலமானதாகச் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகச் செய்திகள் பரவி வருகின்றன....