இலங்கை
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் நிதி அமைச்சு தகவல்
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் நிதி அமைச்சு தகவல்
2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகன இறக்குமதிக்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை நேற்று (05.09.2023) நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரியவருகையில், 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகன இறக்குமதிக்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று (05.09.2023) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அரசாங்க நிதி தொடர்பான குழுவில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க நிதி தொடர்பான குழு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் கூடிய போது குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
குறிப்பாக இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு முகங்கொடுத்து கோதுமை மா மற்றும் டைல்ஸ் போன்ற தொழில்த் துறை போன்று, இரட்டை அதிகார வரம்பு நிலைமையை தவிர்க்க வேண்டிய தன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இந்த வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் எவ்வளவு காலம் நடைமுறையில் இருக்கும் என குழு வினவிய போது அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் உள்நாட்டு சந்தையில் மோட்டார் வாகனங்களின் விலைகள் மீண்டும் அதிகரித்து செல்வதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.