இலங்கை

அம்பாறை மாவட்டம் நிந்தவூரில் முதன் முறையாக வைத்தியத் துறைக்குச் செல்லும் தமிழ் மாணவி

Published

on

அம்பாறை மாவட்டம் நிந்தவூரில் முதன் முறையாக வைத்தியத் துறைக்குச் செல்லும் தமிழ் மாணவி

வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி, நிந்தவூர் பகுதியில் முதன் முறையாக தமிழ் மாணவி ஒருவர் வைத்திய துறைக்கு செல்லவிருக்கின்றார்.

நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் உயிரியல் பிரிவில் கல்வி கற்ற மாணவியான குணசேகரம் ஜனுசிகா என்ற மாணவியே இவ்வாறு சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுள்ளார்.

இவர் கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் அதி விசேட சித்தி 09 A பெற்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த பகுதியில் இருந்து வைத்தியத் துறைக்கு செல்லும் முதலாவது தமிழ் மாணவியாக இவர் அடையாளப்படுத்தப்படுகின்றார்.

Exit mobile version