இலங்கைசெய்திகள்

இலங்கையில் வெடித்துள்ள சிறு போர்

tamilni 43 scaled
Share

இலங்கையில் வெடித்துள்ள சிறு போர்

இலங்கையின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் சிறு போர் வெடித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

தமது அமைச்சர்கள், தங்களது பணிகளுக்கு இடம் தர மறுப்பதாக இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

அத்துடன் தங்களுக்கு உரிய நல்ல வாகனங்களோ அல்லது பிற வசதிகளோ வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தீவிரமாகியுள்ளதை அடுத்து, ஜனாதிபதி விக்ரமசிங்க இன்று(04.09.2023) ஜனாதிபதி செயலகத்தில் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்காக இராஜாங்க அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை எனவும் தமது அமைச்சகங்களுக்கு செயலாளர்கள் இல்லை எனவும் பல பிரச்சினைகளை இராஜாங்க அமைச்சர்கள் எதிர்கொள்கின்றனர்.

மேலும், நாளைய கூட்டத்திற்கு பின்னர் எந்த நேரத்திலும் சிறிய அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படலாம் என்று ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Share
Related Articles
5 11
உலகம்செய்திகள்

இந்தியாவில் 8000 எக்ஸ் தள கணக்குகள் முடக்கம்

இந்தியாவில் (India) 8000 எக்ஸ் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள்...

4 11
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு இணையான தனியாரின் சம்பள அதிகரிப்பு: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

அரச ஊழியர்களின் சமீபத்திய சம்பள திருத்தத்திற்கு இணையாக தனியார் துறை ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச மாதாந்திர...

3 11
உலகம்செய்திகள்

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டிகள்

பாகிஸ்தானின் 20க்கு 20 கிரிக்கெட் லீக் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்படும் என்று பாகிஸ்தானிய கிரிக்கெட்...

1 10
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதில் கட்சிக்குள் பல...