மைத்திரிக்கு வந்த பதவி ஆசை

tamilni 39

மைத்திரிக்கு வந்த பதவி ஆசை

அரசியலில் நான் எதற்கும் தயாராகவே இருக்கின்றேன். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகவும் நான் தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நாம் அனைவரும் சகோதரர்கள்போல் செயற்பட்டு வருகின்றோம்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நான் பொதுவேட்பாளராகக் களமிறங்குவதற்கான சாத்தியம் உள்ளது. அதற்கான அழைப்பு விடுக்கப்பட்டால் நிச்சயம் ஏற்பேன்.

நான் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவன். சொல்லில் அல்ல செயலில் காட்டியவன். கடந்த காலத் தவறுகளையும் சரி செய்து கொண்டு முன்னோக்கிச் செல்ல முடியும். நான் எதற்கும் தயார் என்றார்.

 

Exit mobile version