இலங்கை

மத்திய வங்கியின் ஆளுநருக்கு சர்வதேச ரீதியில் அங்கீகாரம்

Published

on

மத்திய வங்கியின் ஆளுநருக்கு சர்வதேச ரீதியில் அங்கீகாரம்

2023ஆம் ஆண்டுக்கான உலக ‘ஏ’ தர மத்திய வங்கி ஆளுநர்கள் 21 பேருக்கான பட்டியலில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க பெயரிடப்பட்டுள்ளார்.

நியூயோர்க்கை தளமாகக் கொண்ட குளோபல் ஃபைனான்ஸ் சஞ்சிகை வருடாந்தம் நடத்தும் கணக்கெடுப்பின்படி, ‘ஏ’ தர மத்திய வங்கி ஆளுநர்களில் கலாநிதி நந்தலால் வீரசிங்க இணைக்கப்பட்டுள்ளார்.

1994 ஆம் ஆண்டு முதல், குளோபல் ஃபைனான்ஸ் சஞ்சிகை, பணவீக்கக் கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி, நிதி நிலைத்தன்மை மற்றும் வட்டி விகித மேலாண்மை ஆகியவற்றில் அவர்களின் சிறந்த செயல்திறனுக்காக மத்திய வங்கி ஆளுநர்களை வரிசைப்படுத்தி வருகிறது.

இந்த ஆண்டு தரவரிசையின்படி, இந்தியா மத்திய வங்கியின் ஆளுநர் ஸ்ரீகாந்த தாஸ் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version