அரசியல்
சஜித்தும் அநுரவும் இணைய வேண்டும் : டிலான்
சஜித்தும் அநுரவும் இணைய வேண்டும் : டிலான்
சஜித் ஜனாதிபதி, அநுர பிரதமர் என்ற இணக்கப்பாட்டுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் தயாராக வேண்டும் என்று சுதந்திர மக்கள் சபை தெரிவித்துள்ளது.
டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-
மகிந்த மற்றும் ரணிலால் இணைந்து செயற்பட முடியுமென்றால், அநுர, சஜித்தால் ஏன் இணைந்து செயற்பட முடியாது?
ஒன்று சஜித் ஜனாதிபதி, அநுர பிரதமர், அவ்வாறு இல்லாவிட்டால் அநுர ஜனாதிபதி, சஜித் பிரதமர் என்ற இணக்கப்பாட்டுடனேயே அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.
அதற்குச் சுதந்திர மக்கள் சபையின் ஆதரவும் வழங்கப்படும். தனித்துச் செயற்படுவதைவிட கூட்டாகச் செயற்படுவதே சிறந்தது என்றார்.