இலங்கை
நிதி இராஜாங்க அமைச்சரின் கடுமையான எச்சரிக்கை
நிதி இராஜாங்க அமைச்சரின் கடுமையான எச்சரிக்கை
புதிய ஸ்டிக்கர் முறையை திட்டமிட்டு மாற்றியமைத்து மதுபானத்தை விற்பனை செய்து மோசடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவான்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
புதிய ஸ்டிக்கர் முறையை திட்டமிட்டு மாற்றியமைத்து மதுபானத்தை விற்பனை செய்பவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை வரை அவ்வாறான ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 5 இலட்சம் ரூபா வரை அபராதம் அறவிடப்படும். தண்டனையை மீறிச் செயல்படுபவர்களின் மதுபானசாலைக்கான அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும் என குறிப்பிட்டார்.