rtjy 15 scaled
இலங்கைசெய்திகள்

வவுனியா வைத்தியசாலையில் இருந்து வெளிநாடு சென்ற 11 வைத்தியர்கள்

Share

வவுனியா வைத்தியசாலையில் இருந்து வெளிநாடு சென்ற 11 வைத்தியர்கள்

வவுனியா மாவட்ட வைத்தியசாலைகளில் இருந்து 11 வைத்திய நிபுணர்களும், 08 வைத்தியர்களும் வெளிநாடு சென்றுள்ளதாக வவுனியா மாவட்ட அரச வைத்திய சங்க கிளை செயலாளர் வைத்தியர் அரங்கன் தெரிவித்தார்.

வவுனியா பொது வைத்தியசாலையில் நேற்று (01.09) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் கடந்த வருடம் 6 ஆம் மாதத்தில் இருந்து இதுவரை ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளார்கள். இதன்படி வைத்தியர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சென்றுள்ளார்கள்.

விசேட வைத்திய நிபுணர்கள் 272 பேர் சென்றுள்ளனர். பொருளாதார நெருக்கடி, வேலை செய்வதற்கான பொருத்தமான வளங்கள் இன்மை, இடவசதிகள் போதாமை போன்றனவே இதற்கு காரணம்.

தற்போது பிரதான வைத்தியசாலைகள் தவிர்ந்த ஏனைய வைத்தியசாலைகளுக்கு ஆட் பற்றாக்குறை ஏற்படுகிறது. வைத்தியர்களுக்கான மருந்துகள், விடுதிகள், பாதுகாப்பு பிரச்சினை என்பன இதற்கு காரணங்களாகும். வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் ஒரு வைத்திய நிபுணர் கூட இல்லை.

வவுனியாவிற்கு அண்மையில் உள்ளவர்களும் வவுனியா வைத்தியசாலைக்கே வருகிறார்கள். ஆட்பற்றாக்குறை வவுனியா வைத்தியசாலையிலும் ஏற்படுமாக இருந்தால் நிலமை மோசமாக அமையும். வவுனியா வைத்தியசாலைக்கு அண்மையில் ஒரு வைத்திய நிபுணர் நியமிக்கப்பட்டிருந்தார்.

அவருடைய நியமனக் கடிதத்தில் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களையும் பார்க்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு வைத்திய நிபுணர் எவ்வாறு 4 மாவட்டங்களை பார்க்க முடியும். அவ்வளவு தூரம் எங்களிடம் வைத்திய நிபுணர்கள் இல்லை. வைத்தியர்களுக்கான வேலை செய்யக் கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுக்காவிட்டால் இன்னும் பல வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய நிலை ஏற்படும்.

இன்னும் 5000 இற்கு மேற்பட்டோர் செல்வதற்கு தயாரான நிலையில் உள்ளனர். இதனை தடுக்க வேண்டுமானால் அவர்களது பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்.

அவர்கள் விருப்பத்துடன் வேலை செய்யக் கூடிய நிலை உருவாக்கப்பட வேண்டும் வவுனியா மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையான காலப்பகுதி வரை வவுனியா பொது வைத்தியசாலையில் இருந்து 11 வைத்திய நிபுணர்களும், 05 சாதாரண வைத்தியர்களும், வவுனியா மாவட்டத்தின் ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து 03 சாதாரண வைத்தியர்களும் வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்த நிலை தொடருமாக இருந்தால் மக்களுக்கு பாதிப்பே. இதனை அரசாங்கம் புரிந்து கொண்டு எமது சங்கத்தின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வரவேண்டும் எனத் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...