இலங்கையில் இன்று பதிவாகியுள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி

tamilni 11

இலங்கையில் இன்று பதிவாகியுள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி

இலங்கையில் வர்த்தக வங்கிகளில் நேற்றைய தினத்தை விட இன்று (01.09.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.

மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே ரூ. 312.88ல் இருந்து ரூ.311.42 ஆகவும், ரூ. 327.58ல் இருந்து ரூ.326.05 ஆகவும் குறைந்துள்ளன.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் மாற்றமின்றி ரூ.313.72 ஆகவும், விற்பனை விலை ரூ.326 ஆகவும் உள்ளது.

இதேவேளை சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே ரூ. 314ல் இருந்து ரூ. 312 ஆகவும், ரூ. 325ல் இருந்து ரூ. 323 ஆகவும் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version