பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட வாய்ப்பு

tamilni 9

பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட வாய்ப்பு

நேற்று நள்ளிரவு முதல் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டீசல் விலை உயர்வின் தாக்கம் 4 சதவீதத்திற்கு மேல் இருந்தால், பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டியிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

இதற்காக கட்டணம் அதிகரிக்கப்படுமா இல்லையா என்பது குறித்த அறிவிப்பு இன்று பிற்பகல் வெளியிடப்படும் என்று அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Exit mobile version