tamilni 398 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

தேர்தலில் எவர் களமிறங்கினாலும் ரணில் வெல்வது உறுதி

Share

தேர்தலில் எவர் களமிறங்கினாலும் ரணில் வெல்வது உறுதி

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மூன்றெழுத்து கொண்ட ராஜபக்ச உறுப்பினரோ அல்லது சஜித் பிரேமதாஸவோ அல்லது டலஸ் அழகப்பெருமவோ அல்லது அநுரகுமார திஸாநாயக்கவோ களமிறங்கினாலும் ரணில் விக்ரமசிங்க வெல்வது உறுதி அவரை எவராலும் தோற்கடிக்க முடியாது என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதித் தேர்தலைக் குறிவைத்து மொட்டுக் கட்சியில் ஒரு தரப்பினர் பித்தலாட்ட வார்த்தைகளை அள்ளி வீசுகின்றனர். இனவாதத்தையும் மதவாதத்தையும் கக்கி வன்முறையைத் தூண்ட முயல்கின்றனர். அவர்களின் இந்தப் பித்தலாட்டம் – வெறித்தனங்கள் இங்கு எடுபடாது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக்கட்சியினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகளில் பெரும்பாலான உறுப்பினர்களும் நிற்கின்றனர். அதைவிட தமிழ், முஸ்லிம் கட்சிகளைச் சார்ந்தவர்களும் ரணிலையே ஆதரிக்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளிவந்தவுடன் இதன் உண்மை நிலவரம் பகிரங்கமாகத் தெரியவரும். இப்போது வாய்ச்சவிடால் விடுபவர்கள் அப்போது மௌனமாகி விடுவார்கள்.

படுகுழியிலிருந்து இலங்கையை மீட்டெடுத்து வரும் ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டுமென நாட்டு மக்கள் விரும்பும்போது அதற்குச் சவாலாகத் தேர்தலில் எவர் களமிறங்கினாலும் அவர்கள் தோற்பது உறுதி. ரணிலை எவராலும் தோற்கடிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...