tamilni 361 scaled
இலங்கைசெய்திகள்

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

Share

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

அரச பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் (28) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை இடம்பெறும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கண்டி நகர எல்லைக்கு உட்பட்ட அனைத்து அரசாங்க பாடசாலைகளும் 28, 29 மற்றும் 31 ஆம் திகதி வரை இடம்பெறாது எனவும் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், 2024 ஆம் ஆண்டிற்கு தேவையான பெரும்பாலான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளுக்காக அச்சிடப்பட்ட புத்தகங்களில் பெரும்பாலானவை அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தனியார் துறைக்கான புத்தகங்கள் அடுத்த வாரமளவில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாடசாலை மாணவர்களுக்கு தேவையான அனைத்து சீருடை துணிகளையும் சீனாவிடம் கோரியுள்ளதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Teachers and Principals Trade Union 1200x675px 24 10 25 1000x600 1
செய்திகள்இலங்கை

கல்வி மறுசீரமைப்பு குழப்பம்: அரசு மெளனம் காப்பதாக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான ஆசிரியர்கள் மற்றும் கல்வி சார்ந்த தரப்பினரால் எழுப்பப்பட்ட முக்கிய கேள்விகளுக்கு அரசாங்கம்...

india supermarket march 16 2021 reuters
செய்திகள்இலங்கை

பண்டிகைக் கால விலைவாசி உயர்வு: முறையாகத் திட்டமிட நுகர்வோர் முன்னணி வலியுறுத்தல்

வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஒரு...

11 18
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு அழைத்து வரப்பட்டது உண்மையான செவ்வந்தி இல்லையா..!

நேபாளத்தில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டது உண்மையான செவ்வந்தியா என சந்தேகம் இருப்பதாக...

10 19
இலங்கைசெய்திகள்

கெஹெல்பெத்தர பத்மேவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் தீர்மானம்

பிரபல பாதாள உலகக்கும்பல் புள்ளியான கெஹெல்பெத்தர பத்மேவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போதைக்கு...