இலங்கைசெய்திகள்

வந்தேறு குடிகள் சிங்களவர் !! நிரூபிக்க மகாவம்சமே போதும்

tamilni 358 scaled
Share

வந்தேறு குடிகள் சிங்களவர் !! நிரூபிக்க மகாவம்சமே போதும்

ஈழத் தமிழர்களைப் பார்த்து வந்தேறு குடிகள் என சொல்லும் சிங்கள இனவாதிகளுக்கு பதில் கொடுக்க மகாவம்சமே போதும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (27.08.2023) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஈழத் தமிழர்களைப் பார்த்து வந்தேறு குடிகள் என பித்தலாட்ட பொய்களை முன் வைக்கும் சிங்கள இனவாதிகளே, உங்கள் மகாவம்ச நூலை நன்றாக வாசித்துப் பாருங்கள் அதில் பல உருட்டுகள் இருந்தாலும் ஆறாம் அத்தியாயம் சொல்கிறது விஜயனுடைய வருகை தொடர்பாக.

விஜயன் வரும் போது இயக்கர் நாகர் எனும் பூர்வீக குடிகள் வாழ்ந்து கொண்டிருந்ததாகவும் மகாவம்சம் கூறும் குவேனி கல்வெட்டுகளில் கவினி என்ற பெயரில் அழைக்கப்பட்ட பேரழகு வாய்ந்த தமிழ்ப் பெண்ணை திருமணம் முடித்து ஈழத்தில் குடியேறியதாக கூறுகின்றது.

எனவே இந்த உண்மையை மறைத்து தமிழர்களைப் பார்த்து வந்தேறு குடிகள் என அழைத்து சிங்கள மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்த சிங்கள இனவாதிகள் எண்ணியுள்ளனர்.

2009 முன் பெட்டிப் பாம்பாக இருந்த இனவாதிகள் சிலர் பூனையில்லா வீட்டில் சுண்டெலிக்கு கொண்டாட்டம் என்பது போல் இருக்கின்றனர்.

விஜயன் வருகைக்கு முன் தமிழர்கள் தான் பூர்வீக குடிகள் என்பதற்கு பலாங்கொடை , இரணைமடு , பொம்பரிப்பு, செங்கடகல, பொலநறுவை, அனுராதபுரம், ஆனைக்கோட்டை போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்கள் தமிழர்கள் தொடர்பான போதிய சான்றுகளை தமிழர்களை பூர்வீக குடிகள் என உறுதி செய்கின்றன.

விஜயன் வருவதற்கு முன்னர் சைவமதமும் தமிழ் மன்னர்களும் தான் இருந்தனர் என்பதை மகாவம்சமே மிகப் பெரிய ஆதாரம்.
ஆனால் 1948 ஆண்டின் பின்னர் சிங்கள பேரினவாதம் தமிழர்களின் தொன்மைகளை மாற்றி பௌத்த சிங்கள மயப்படுத்தும் மோசமான தமிழ் இனப்படுகொலையை அரங்கேற்றி வருகிறது அதன் தொடர்ச்சியே தமிழர்களை வந்தேறு குடிகள் என கூறும் பித்தலாட்டம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...