இலங்கை
நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த வீட்டு வாடகை 1000 ரூபா!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த வீட்டு வாடகை 1000 ரூபா!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக மாதிவெலவில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்தொகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு கடந்த 30 வருடங்களாக மாதாந்த வீட்டு வாடகையாக 1000 ரூபா மாத்திரே அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள தணிக்கை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1993 ஆம் ஆண்டு முதல் குடியிருப்பின் நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி கட்டணங்களுக்காக வைப்புத்தொகையாக அறவிடப்பட்ட ஆயிரம் ரூபா தொகை உரிய காலத்தில் திருத்தப்படவில்லை எனவும் தணிக்கை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரொருவர் பதவி நீக்கப்பட்டவுடன் உத்தியோகபூர்வ குடியிருப்புகளை உடனடியாக காலி செய்து ஒப்படைக்க வேண்டும் என்ற போதிலும், 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்குள் 06 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்படி அபராதத் தொகையையும், மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்கள் உட்பட 455,904 ரூபாவையும் செலுத்தவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.