இலங்கை

வவுனியா இரட்டைக்கொலை சந்தேகநபரின் சகோதரன் மீது தாக்குதல்

Published

on

வவுனியா இரட்டைக்கொலை சந்தேகநபரின் சகோதரன் மீது தாக்குதல்

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் சகோதரர் மீது சிலர் தாக்குதல் மேற்கொண்டதில் அவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் நேற்று (26.08.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 23ஆம் திகதி வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரின் சகோதரர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பிரதான சந்தேகநபரின் சகோதரரான 37 வயதுடைய நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version