rtjy 252 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்

Share

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்

பிரமிட் திட்டங்களால் அவற்றின் சட்டபூர்வத்தன்மையை நிரூபிக்கும் நோக்கில் வெளியிடப்படும் கூற்றுக்களில் எவ்வித உண்மையும் இல்லை என்றும், அவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இணையவழித்தளங்கள் ஊடாக செயற்படும் சில பிரமிட் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யுமாறு பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவதாக தமக்குப் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

‘‘இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குவிதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இத்திட்டம் முதலீட்டாளர்களின் நிதியங்களைப் பாதுகாக்கின்றது. இத்திட்டம் உரிய வரிகளை அரசுக்குச் செலுத்துகின்றது, நிதியங்களை மீளப்பெறும் பொருட்டு இத்திட்டத்தில் பங்கேற்பவர்கள் தமது நிதியங்களிலிருந்து தனிப்பட்ட வருமான வரியை இலங்கை மத்திய வங்கிக்குச் செலுத்தவேண்டும். அன்றேல் அவர்களது நிதியங்கள் மத்திய வங்கியினால் முடக்கப்படும், இத்திட்டம் இலங்கை மத்திய வங்கியுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தது’ என்பன போன்ற விடயங்களே தமது திட்டத்தை நியாயப்படுத்துவதற்காக சில பிரமிட் திட்ட ஏற்பாட்டாளர்களால் கூறப்படுவதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.’’

இவ்வாறான கூற்றுக்களை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும், இக்கூற்றுக்களில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

எனவே இத்தகைய திட்டங்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடனும், விழிப்புடனும் செயற்படுமாறு மத்திய வங்கி பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

மேலும் இத்திட்டங்களில் முதலீடு செய்வதனூடாக பொதுமக்கள் பணத்தை இழக்கக்கூடும் என்பதனால், இவ்வாறான திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம் என்றும் மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் உரிமம் அளிக்கப்பட்டு, ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிறுவனங்களின் விபரங்களை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ வலைத்தளத்திலும், வெளிநாட்டுச்செலாவணித் திணைக்களத்தின் வலைத்தளத்திலும் பார்வையிட முடியும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...