tamilni 269 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் மருந்து ஒவ்வாமை காரணமாக குழந்தை மரணம்!

Share

கொழும்பில் மருந்து ஒவ்வாமை காரணமாக குழந்தை மரணம்!

கொழும்பு, ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை மருந்தொன்று வழங்கப்பட்டதன் பின்னர் நோய் தீவிரமடைந்து உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம்சுமத்தியுள்ளனர்.

அவிசாவளை – எபலபிட்டிய பிரதேசத்தினை சேர்ந்த எட்டு மாத குந்தையான டெஷான் விதுநெத் திடீர் சுகயீனம் காரணமாக ஓகஸ்ட் 4 ஆம் திகதி அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்பின்னர், மேலதிக சிகிச்சைக்காக ஓகஸ்ட் 5 ஆம் திகதி கொழும்பு, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதன்போது குழந்தைக்கு நோய் உறுதி செய்யப்படாமல் யூகத்தின் அடிப்படையில் வலிப்பு எதிர்ப்பு மருந்து வழங்கி மருத்துவர்கள் சிகிச்சையளித்ததாகவும் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை டெஷான் கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், டெஷானின் உடல் நேற்று பிற்பகல் குடும்ப மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது..

எவ்வாறாயினும், மருந்து ஒவ்வாமை காரணமாக குழந்தை உயிரிழந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய மறுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
6 18
இலங்கைசெய்திகள்

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல்...

5 18
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்த செவ்வந்தியை தமிழர் பகுதிக்கு அழைத்து சென்ற சிஐடியினர்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, கிளிநொச்சிக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச்...

4 18
இலங்கைசெய்திகள்

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி...

3 18
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பில் முக்கிய பிரமுகர்கள்! வெளிவரும் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியுடன் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நெருங்கிய...